கரீம்நகர்: கரீம்நகரில் விபத்து நடந்ததையடுத்து சில மணி நேரங்களில் விபத்து ஏற்படுத்திய இளைஞரை காவல் துறையினர் பிடித்தனர். ஆனால் அவர் 18 வயது பூர்த்தி ஆகவில்லை என்பது தெரியவந்தது.
காரை ஓட்டியவருடன் இருந்த மற்ற மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களும் 18 வயதுக்கு குறைவானவர்கள்.
ஞாயிற்றுக் கிழமை காலை கரீம்நகர் நகரில் உள்ள கமான் பகுதியில் உள்ள குடிசை மீது திடீரென்று கார் ஒன்று மோதியது. அதில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சென்ற கரீம் நகர் காவல் துறையினர் காயம் அடைந்தோரை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஃபரீத்,லலிதா, சுனிதா மற்றும் ஜோதி ஆகிய பெண்கள் இறந்தனர்.