தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜிம்முக்கு வெளியே கடத்தல் பிளான்.. புயலென ஓட்டம் பிடித்த பெண்.. பல்பு வாங்கிய கும்பல்.. - woman abducted in yamunanagar

ஹரியானா மாநிலத்தில் இளம்பெண்ணை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜிம்முக்கு வெளியே கடத்தல் பிளான்
ஜிம்முக்கு வெளியே கடத்தல் பிளான்

By

Published : Jan 2, 2023, 12:50 PM IST

ஜிம்முக்கு வெளியே கடத்தல் பிளான்

சண்டிகர்:ஹரியானா மாநிலம் யமுனாநகரில் உடற்பயிற்சி கூடத்திற்கு வெளியே பெண்ணை காரில் கடத்த முயன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் டிசம்பர் 31ஆம் தேதி நடந்துள்ளது. யமுனாநகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பயிற்சி எடுத்துவருகிறார்.

இவர் டிசம்பர் 31ஆம் தேதி காலை வழக்கம்போல் பயிற்சிக்கு சென்றுவிட்டு வெளியேறினார். அப்போது, வெளியே காரில் காத்திருந்த 4 பேர் கொண்ட கும்பல், இவரை வலுகட்டாயமாக இழுத்து காருக்குள் தள்ள முயன்றது. இருப்பினும், அந்த பெண் அவர்களை உதறித்தள்ளிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இந்த கும்பல் அந்த பெண்ணை பிடிக்க எவ்வளவு விரட்டியும். பெண்ணின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இதனிடையே மக்கள் கூடியதால் கடத்தல் கும்பல் பின்வாங்கி அங்கிருந்து புறப்பட்டுவிட்டது. அதன்பின் அந்த பெண் யமுனாநகர் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் உடற்பயிற்சி கூடத்திற்கு வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேருக்கும் அந்த பெண்ணுக்கும் முன்னதாகவே பழக்கம் இருந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:ஆட்டோ மீது விழுந்த கிரானைட் கற்கள் - 3 பேர் உடல் நசுங்கி பலி

ABOUT THE AUTHOR

...view details