டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹல்திராம் நிறுவனத்திலிருந்து பொருள்கள் பெற்று கடை நடத்த விரும்பியுள்ளார். அதற்காக, அந்நிறுவனத்தை தொடர்புகொள்வதற்காக, இணையதளத்தில் பார்த்தபோது அங்கிருந்த ஹல்திராம் நிறுவனத்தின் டீலரை கண்டறிந்தார்.
அந்த இணையதளத்திலேயே ஒரு தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டது. அப்பெண் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, நிறுவனத்தின் சார்பாக பேசிய நபர், சில படிவங்களை நிரப்ப கூறியுள்ளார். மேலும், ஆவணங்கள் சரிபார்ப்பு, பாதுகாப்பு வைப்பு போன்றவற்றுக்கு பல்வேறு கட்டணங்களைச் செலுத்துமாறு கேட்டுள்ளார்.
இணையவழி மோசடி
இதையடுத்து, அப்பெண் 11.74 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர், சில தினங்களுக்குப் பிறகு 1.6 லட்சம் ரூபாய் கொடுக்கும்படி அப்பெண்ணிடம் கேட்டுள்ளனர். தொடர்ந்து பணம் கேட்டு வருவதை உணர்ந்த அப்பெண்தான் மோசடிக்கு இரையாகிவிட்டதை உணர்ந்தார்.
பின்னர், உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர். விசாரணையில், ஹல்திராம் பெயரில் ஏராளமான போலி இணையதளங்கள் இயங்குவது கண்டறியப்பட்டது.
கோடி கணக்கில் மோசடி