காத்மாண்டு:நேபாளம் பவுத்தா பகுதியில் வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல்கிடைத்துள்ளது. தகவலின் பேரில் இன்று (மார்ச் 13) அங்கு சோதனை நடத்திய காவல் துறையினர், பதப்படுத்தப்படாத 2.5 கிலோ யுரேனியத்தை பறிமுதல் செய்தனர்.
இதில், யுரேனியத்தை பதுக்கி வைத்திருந்த நேபாளிகள் நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டகள் மீது வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.