லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த அஜய் ரத்தோட் - பூனம் தம்பதிக்கு குழந்தை இல்லை என தெரிகிறது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 6 வயது சிறுமியை தத்தெடுத்துள்ளனர்.
இது அஜய் ரத்தோடின் மனைவிக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி சிறுமிக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அஜய் ரத்தோட் தனது மனைவியிடம் கேட்டபோது, சூடான டீ தவறுதலாக சிறுமி மீது கொட்டிவிட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது, தாயார் சூடான எண்ணெய்யை எடுத்து, தனது அந்தரங்க உறுப்பில் ஊற்றிவிட்டார் என கூறியுள்ளார். இந்த சம்பவம் வெளியே தெரிந்துவிட்டதால், அஜய் ரத்தோடின் மனைவி பூனம், தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வளர்ப்பு மகளை மருத்துவமனையில் அனுமதித்த அஜய் ரத்தோட், மனைவி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.