ஒடிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பலியா பஜாரில் கார்த்திகேசுவரர் திருவிழா நடைபெற்று கொண்டிருந்தது. இதற்காக பட்டாசுகள் அதிகளவில் வாங்கப்பட்டு, வெடிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக பட்டாசு சேமித்து வைக்கப்பட்டிருந்த பெட்டியில் விழுந்த தீப்பொறியால், அனைத்து பட்டாசுகளும் வெடித்துச்சிதறின.
இதனால் மக்கள் அங்கும் இங்குமாக ஓடினர். இந்த விபத்தில் சிக்கிய 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் பலர் மாவட்ட மருத்துவமனையிலும், பலத்த காயம் அடைந்தவர்கள் எஸ்சிபி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவில் பட்டாசு வெடித்ததில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் இதையும் படிங்க:மன உளைச்சல்: ஆண் உறுப்பை துண்டித்துக்கொண்ட இளைஞர் கவலைக்கிடம்