உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் முலாயம் சிங் யாதவ் இன்று காலை 8.16 மணியளவில் காலமானார்.
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் காலமானார்! - முலாயம் சிங் யாதவ் காலமானார்
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பெற்று வந்த உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலயம் சிங் யாதவ் காலமானார்...!
முலாயம் சிங் யாதவ் ஆகஸ்ட் 22அன்று மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 1ஆம் தேதி இரவு அவசர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். மேதாந்தாவின் டாக்டர்கள் குழு முலாயம் சிங் யாதவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று(அக்.10) காலை அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானார். அன்னாரின் இறப்பிற்கு உத்தரப்பிரதேச மக்களும், சமாஜ்வாதி கட்சித்தொண்டர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.