டெல்லி:இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த சுனில் அரோராவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நிறைவடைந்தது. அதனடிப்படையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டார்.
புதிய தேர்தல் ஆணையாளர்
இதனால், மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணைய குழுவில் ஒரு காலியிடம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அலுவலரான அனூப் சந்திரா பாண்டே புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சுஷில் சந்திரா, ராஜிவ் குமார் உள்ளடக்கிய தேர்தல் ஆணைய குழுவில், தற்போது அனூப் சந்திரா பாண்டே இணைந்துள்ளார்.
இப்பதவிக்கு வயது வரம்பு 65 என்பதால், 62 வயதான அனூப் சந்திரா, 2024ஆம் ஆண்டு வரை பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய தலைமை தேர்தல் ஆணையாளரான சுஷில் சந்திரா அடுத்த ஆண்டு ஓய்வுபெறவுள்ளதால், அனூப் சந்திரா அடுத்த தலைமை தேர்தல் ஆணையாராக நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.