ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங் காலமானார்! - பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி

டெல்லி: காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பூட்டா சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை காலமானார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங் காலமானார்!
Buta Singh passes away
author img

By

Published : Jan 2, 2021, 3:25 PM IST

பூட்டா சிங் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த அக்டோபர் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பூட்டா சிங்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் 1934ஆம் ஆண்டு பிறந்த பூட்டாசிங், முதல்முதலாக சாத்னா மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி. ஆனார். அதன்பின்னர் 7 முறை வெற்றிபெற்று எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவர் பூட்டா சிங். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவராக விளங்கியவர்.

in article image
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி

பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மிகவும் அனுபவம் வாய்ந்த நிர்வாகியான பூட்டா சிங், ஏழை மக்களின் நலனுக்காகவும் விளிம்புநிலை மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு உண்மையான மக்கள் சேவகனையும் விசுவாசமான தலைவரையும் நாடு இழுந்துள்ளது என பூட்டா சிங்குக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details