தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகல் - முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்

46 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியிலிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

Ashwani Kumar
Ashwani Kumar

By

Published : Feb 15, 2022, 5:02 PM IST

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அஸ்வினி குமார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 46 ஆண்டு காலம் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த நிலையில், அஸ்வினி குமார் இன்று அக்கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தில், "நான் 46 ஆண்டுகால நீண்ட தொடர்புக்குப் பிறகு கட்சியை விட்டு வெளியேறுகிறேன். உங்களுக்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்களைச் செலுத்தும் அதே வேளையில், கடந்த காலத்தில் எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பிற்கு நான் நன்றி கூறுகிறேன். மேலும் வரும் ஆண்டுகளில் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்" என்றார்.

பஞ்சாப்பைச் சேர்ந்த மூத்த தலைவரான அஸ்வினி குமார் அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்னதாக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அக்கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கோர்ப்வாக்ஸ் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி

ABOUT THE AUTHOR

...view details