பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அலுவலரான சர்தார் இக்பால் சிங் லால்புரா தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக தேர்வாகியுள்ளார். தற்போதைய தலைவரானா கயோருல் ஹஸன் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இக்பால் சிங் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையில் பணிபுரியும் போது குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் லால்புரா. இவர் பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளராகவும் இருந்துள்ளார்.