தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம் - பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. வாஜ்பாய் உருவப்படத்திற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Vajpayee
Vajpayee

By

Published : Aug 16, 2023, 7:52 AM IST

டெல்லி :முன்னாள் பிரதமர் அடக் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட். 16) அனுசரிக்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தனார். மேலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தலைமைப் பண்பால் நாடு பெரிதும் பயன் அடைந்து உள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவின் முன்னேற்றத்தை உயர்த்துவதற்கும், பல்வேறு துறைகளில் 21 ஆம் நூற்றாண்டுக்கு நாட்டை எடுத்துச் செல்வதற்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முக்கிய பங்காற்றி உள்ளதாக தெரிவித்து உள்ளார். இந்தியாவின் 140 கோடி மக்களுடன் இணைந்து அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளில், அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

பாஜகவில் இருந்து முதல் முறையாக பிரதமரான வாஜ்பாய், கட்சியை அதன் அடித்தளத்திற்கு அப்பால் பிரபலப்படுத்தி ஆறு ஆண்டுகள் கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி, சீர்திருத்தங்கள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்திய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு தனது 93வது வயது அவர் இயற்கை எய்தினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமூகர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க :"ஜெயலலிதா தான் எனக்கு நன்றிக் கடன்பட்டவர்.. நானில்லை.." - திருநாவுக்கரசர் எம்.பி.!

ABOUT THE AUTHOR

...view details