தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார் - பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜக்கார் பாஜகவில் இணைந்தார்.

Sunil Jakhar
Sunil Jakhar

By

Published : May 19, 2022, 1:51 PM IST

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்தவர் சுனில் ஜக்கார். இவர் கடந்த சில தினங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை முகநூலில் நேரலையில் இருக்கும்போதே அறிவித்தார். இது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சுனில் ஜக்கார் வேறு ஏதேனும் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளப் போகிறார் என யூகங்கள் பரவின.

இந்த நிலையில் சுனில் ஜக்கார் பாஜனதாவில் இணைந்துள்ளார். இது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.

எதிர்க்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 90க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிக்கொடி நாட்டி ஆட்சியை கைப்பற்றியது. ஆளும் கட்சியான காங்கிரஸ் 20 சீட்டுக்குள் சுருங்கிய நிலையில், பாஜக ஒற்றை லக்க எண்ணுக்கு தள்ளப்பட்டது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: காங்கிரஸ் விரும்புவது ஒரே இந்துஸ்தான்- ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details