கொழும்பு (இலங்கை): இலங்கை அரசின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரது சகோதரர்களான பிரதமர், நிதியமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளே காரணம் என்று இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று (நவ.14) தீர்ப்பு வழங்கியுள்ளது.
இலங்கையில் கடந்த வருடம் வரலாறு காணாத அளவுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் இலங்கை முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இதனையடுத்து அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகிய மூன்று சகோதரர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் இவர் இலங்கையைவிட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (நவ.14) இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பொருளாதாரத்தைத் தவறாகக் கையாண்ட முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே மற்றும் இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவாத் உட்பட உயர் அதிகாரிகள் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையும் படிங்க:இலங்கை கடற்பகுதியில் திடீர் நிலநடுக்கம்! தமிழகத்திற்கு சுனாமி எச்சரிக்கையா?