தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மன்மோகன் சிங் வராததால் களையிழந்த விவிஐபி வாக்குச்சாவடி! - Dispur Government Higher Secondary School

கவுஹாத்தி: கடந்த 20 ஆண்டுகளாக மன்மோகன் சிங் வாக்களித்து வந்த டிஸ்பூர் அரசுப் பள்ளி வாக்குச்சாவடியானது, அவரது வருகையின்றி களையிழந்து காணப்படுகிறது.

Manmohan Singh
மன்மோகன் சிங்

By

Published : Apr 6, 2021, 12:30 PM IST

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது மனைவி குருச்சரன் கவுருடன், கடந்த 20 ஆண்டுகளாக டிஸ்பூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தி வந்துள்ளார். இதனால், அந்த வாக்குச்சாவடி விவிஐபி இடமாக இருந்து வந்தது. தவிர பலத்த காவல் பாதுகாப்புடன் இத்தொகுதி திகழ்ந்து வந்துள்ளது.

ஆனால், 2020ஆம் ஆண்டில் மன்மோகன் சிங், குடும்பத்துடன் டெல்லியில் குடியேறினார். இதையடுத்து, அவரும் அவரது மனைவியும் டெல்லி வாக்காளர்களாக மாறினர். இறுதியாக, டிஸ்பூரில் 2019ஆம் ஆண்டு வாக்கு அவர் வாக்கு செலுத்தினார்.

முந்தைய தேர்தல்களில் கடுமையான பாதுகாப்பிலிருந்த இந்த விவிஐபி வாக்குச்சாவடி, தற்போது மன்மோகன் சிங் அவரது மனைவி குருச்சரன் கவுர் ஆகியோர் வாக்களிக்க வராததால் களையிழந்து காணப்படுகிறது.

இதையும் படிங்க:புதுச்சேரியில் என்.ஆர். ரங்கசாமி வாக்களிப்பு!

ABOUT THE AUTHOR

...view details