தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்

2012ஆம் ஆண்டு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தபோது நந்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் தேவ கவுடா பேசியதாகக்கூறி அந்நிறுவனம் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தது.

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்
முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்

By

Published : Jun 22, 2021, 1:01 PM IST

பெங்களூரு (கர்நாடகா): நந்தி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் காரிடார் எண்டர்பிரைஸ் (நைஸ்) தனியார் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக பேசியதற்காக முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவ கவுடாவுக்கு இரண்டு கோடி ரூபாய் அபராதம் விதித்து நகர கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தபோது நந்தி எண்டர்பிரைசஸ் நிறுவனம் குறித்து அவதூறாகப் பேசியதாகக்கூறி அந்நிறுவனம் தேவ கவுடா மீது வழக்கு தொடர்ந்தது.

மைசூரு சாலை அமைக்கும் பணியில் நந்தி உள்கட்டமைப்பு நிறுவனம் பங்குவகித்த நிலையில், சட்டவிரோதமாக பலரது நிலங்கள் இப்பணியில் கையகப்படுத்தியதாகவும், நிலம் எடுப்பில் 100 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் தேவ கவுடா கூறியிருந்தார்.

தொடர்ந்து தேவ கவுடா கூறிய குற்றச்சாட்டை மறுத்த நைஸ் நிறுவனம், 10 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மல்லண்ண கவுடா, தேவ கவுடா, தனது குற்றச்சாட்டை இவ்வழக்கில் நிரூபிக்கத் தவறியதாகக் கூறி இரண்டு கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் - ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details