பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் கோவிட் பெருந்தொற்று காரணமாக தேவேகவுடா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தேவேகவுடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தகவல்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
தேவேகவுடாவுக்கு கரோனா பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி சென்னம்மாவுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும் அவருக்கு கரோனா பாதிப்பில்லை.
இந்நிலையில் மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் பிரதமர் தேவேகவுடா விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளார்.
இது குறித்து பொம்மை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு, அவர் அன்றாட பணிகளை விரைந்து கவனிக்க வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் கே. சுதாகரும், தேவேகவுடா விரைந்து குணமடைய வாழ்த்தியுள்ளார். மேலும், “முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : EXCLUSIVE : நேதாஜியின் சர்வமத சித்தாந்தத்தை செயல்படுத்த வேண்டும்- நேதாஜி பேரன்