முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் உறவினர் (niece), காங்கிரஸ் மூத்தத் தலைவருமான கருணா சுக்லா கோவிட்-19 பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். 70 வயதான இவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ராமாகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த கருணா சுக்லா, கட்சியில் ஓரங்கட்டப்பட்ட காரணத்தால் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரசில் இணைந்தார்.