பரேலி:உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாநில தேர்வு வாரியத்தின்கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் (UP Board High School and Intermediate Examination) இன்று (ஏப்ரல் 25) வெளியானது. இதில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வராக தேர்வெழுதிய முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் மிஷ்ரா என்ற பப்பு பாரடோல் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள பித்ரி சாயின்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினரான ராஜேஷ் மிஷ்ரா, தான் தேர்வெழுதியதில் 3 பாடங்களில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இதனால், விடைத்தாள் நகலைப் பெற்று, சரிபார்க்க விண்ணப்பிக்க உள்ளதாகவும் பப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னாள் பாஜக எம்எல்ஏ பப்பு பாரடோல் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்ததை அறிந்த அவரது ஆதரவாளர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். மேலும், பப்பு பாரடோவுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த பப்பு பாரடோல், “12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தற்போது தேர்ச்சி அடைந்துள்ளேன். இதனையடுத்து சட்டம் (LLB) படிக்க இருக்கிறேன்.