புதுச்சேரி :அமைச்சர் சந்திர பிரியங்காவின் ராஜினாமா கடிதத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் இருந்து தேர்வு எடுக்கப்பட்டவர் சந்திர பிரியங்கா. புதுச்சேரியில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்த போது என்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1985 ஆம் ஆண்டுக்கு பிறகு புதுச்சேரியில் பெண் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என வியந்து பாராட்டப்பட்டது. இரண்டரை ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
கடந்த சில மாதங்களாக அமைச்சர் சந்திர பிரியங்காவின் செயல்பாடுகள் சரியில்லை என்றும் அவரை அமைச்சர் பதிவியில் இருந்து நீக்கம் செய்ய முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்தார் என்றும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சந்திர பிரியங்காவே முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர் அப்போது அனுப்பி உள்ள கடிதத்தில், "ஜாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன்.
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
பொதுவாக அமைச்சர், பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது தொடர்பான அரசாணை வெளியிடப்படும். ஆனால் சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அனுப்பிய கடிதத்திற்கு அரசாணை வெளியிடப் படவில்லை. இதானால் அவர் அமைச்சராக நீடிக்கிறாரா என குழப்பங்கள் நீடித்தது வந்தன.
இந்தநிலையில் அமைச்சர் சந்திர பிரியங்க பதவி நீக்கம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்து புதுச்சேரி அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதையடுத்து சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
மேலும், அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கம் செய்ததற்கான உத்தரவு புதுச்சேரி அரசிதழில் அதிகாரப்பூர்மாக வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நீண்ட நாட்களாக நீடித்தது வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த போக்குவரத்து துறை அமைச்சர் யார் என்று போட்டி கடந்த 10 நாட்களாக நிலவி வருகிறது.
பாஜகவும் அமைச்சர் பதவி கேட்டு முதலமைச்சருக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் தனது கட்சி எம்.எல்.ஏ.வான காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த திருமுருகனுக்கு வழங்க ஆலோசித்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க :சென்னை புறநகரில் அக்டோபர் 24ஆம் தேதி மின்சார ரயில் சேவைகள் ரத்து! கண்டிப்பா படிங்க! அப்புறம் கஷ்டப்படாதிங்க!