பிகார் மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், பிகாரில் லல்கஞ்ச் பகுதியில் ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்எல்ஏ முன்னா சுக்லாவின் இல்ல நிகழ்ச்சியில், கரோனா விதிமுறைகள் காற்றில் பறக்கவிட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் ஏற்பாடு செய்திருந்த விழாவிற்கு, பிரபல போஜ்புரி நடிகை அக்ஷரா சிங்கும் வருகைதந்திருந்தார்.
நிகழ்ச்சியில் நடனமாடிய முன்னா சுக்லா இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொலிகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதில், அனைவரும் முகக்கவசம் இல்லாமலும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலும் அருகருகே நின்று நடனமாடியும், பேசியும் மகிழ்கின்றனர்.
எல்லாவற்றிக்கும் மேலாக, முன்னாவின் தலைமை பாதுகாப்புக் காவலர், நிகழ்ச்சியின்போது மேல் நோக்கி தனது துப்பாக்கியால் சுட்டதையும் காணமுடிகிறது.
பிரபல போஜ்புரி நடிகை அக்ஷரா சிங் கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு நிகழ்ச்சியில் 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளக் கூடாது என்கிற உத்தரவு அமலில் உள்ள நிலையில், முன்னா சுக்லாவின் இல்ல விழாவில் 200-க்கும் மேற்பட்டோர் எந்தவொரு கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் கலந்துகொண்டுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து காவல் துணைக்கண்காணிப்பாளர், முன்னா சுக்லா, நடிகை அக்ஷரா சிங் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச் சூடு இதையும் படிங்க:ஏப்ரல் 28ஆம் தேதிமுதல் தடுப்பூசி பதிவு தொடக்கம் - மத்திய அரசு