பல கோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்(Anil Deshmukh) அமலாக்கத் துறையினார் நவம்பர் ஒன்றாம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர், மும்பை உயர் நீதிமன்றத்தில்(Bombay High Court) ஆஜர் படுத்தப்பட்ட அனில் தேஷ்முக்கை நவம்பர் 12ஆம் தேதி வரை காவலில் வைத்து அமலாக்கத் துறை(Enforcement Directorate) விசாரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அனில் தேஷ்முக் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் இருக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஜெயில் சாப்பாடு சாப்பிடுங்க
தனக்கு விட்டில் தயாரித்த உணவு வேண்டும் என அனில் தேஷ்முக் கோரிக்கைவைத்தார். இதற்கு நீதிபதி, முதலில் ஜெயில் சாப்பாட்டை(Jail food) சாப்பிடுங்கள். பின்னர் அது சரிப்படவில்லை என்றால் பின்னர் பரிசீலிக்கிறேன் எனக் கூறிவிட்டார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையான மகா விகாஸ் அகதி கூட்டணி(Maha Vikas Aghadi) அரசு ஆட்சி நடத்திவருகிறது. இந்தக் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக் உள்துறை அமைச்சராக பொறுப்பிலிருந்தார்.
இதையும் படிங்க:Babasaheb Purandare: பத்ம விபூஷண் விருது பெற்ற வரலாற்று ஆசிரியர் பாபாசாஹேப் காலமானார்