டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் சகோதரி அஞ்சு சேவாக், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளர் பங்கஜ் குப்தா முன்னிலையில் நேற்று(டிசம்பர் 31) அக்கட்சியில் இணைந்தார்.
இதுகுறித்து அஞ்சு சேவாக் கூறுகையில், "மாற்றம் என்பது இயற்கையின் விதி. அது எல்லோருக்கும் தேவை. ஆம் ஆத்மி கட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதால், அக்கட்சியில் இணைந்துள்ளேன். கட்சி எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் ஏற்கத் தயார்" என்றார்.