தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடிகை குத்து ரம்யா, டி.கே. சிவக்குமார் ட்விட்டரில் மோதல்! - ரம்யா சிவக்குமார் மோதல்

பிரபல நடிகை குத்து ரம்யாவும், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவருமான டி.கே. சிவக்குமாருக்கும் ட்விட்டரில் மோதிக்கொண்டனர்.

Ramya
Ramya

By

Published : May 12, 2022, 5:25 PM IST

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.,யான ரம்யா ஸ்பந்தனாவுக்கும் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமாருக்கும் இடையே மறைமுகப் போர் தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. இந்த நிலையில் டி.கே. சிவக்குமாரை ட்விட்டரில் டேக் செய்து வெளிப்படையாகவே கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை ரம்யா.

முன்னதாக, நேற்றும் (மே11) நடிகை ரம்யா, முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு ஆதரவாகவும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் (கேபிசிசி) டி.கே.சிவக்குமாருக்கு எதிராக மறைமுகமாகவும் ட்வீட் செய்துள்ளார்.

நடிகை குத்து ரம்யா, டி.கே. சிவக்குமார் ட்விட்டரில் மோதல்!

தொடர்ந்து, மாண்டியா முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான ரம்யா, “அரசியல் தலைவர்கள் பாரபட்சமற்ற செயல்களில் ஈடுபடுவது சகஜம். திருமண பந்தத்தால் பல்வேறு கட்சி தலைவர்கள் குடும்ப உறுப்பினர்களாக மாறினர். ஆனால் எம்.பி.பாட்டீல் பற்றி டி.கே.சிவகுமார் கூறியது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது” என்று கூறியிருந்தார்.

இது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமாரும், பாஜக மூத்தத் தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் திருமணத்தின் மூலம் உறவினர் ஆகியுள்ளனர். இதை நினைவுகூர்ந்து நடிகை ரம்யா இவ்வாறு கூறியுள்ளார். மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நடிகை ரம்யா ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முகமாக வலம்வந்தார்.

நடிகை குத்து ரம்யா, டி.கே. சிவக்குமார் ட்விட்டரில் மோதல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நட்பில் இருந்தார். இந்த நிலையில் எம்.பி., தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் என பல்வேறு பதவிகள் அவருக்கு கிடைத்தன. அவரின் தனிப்பட்ட வளர்ச்சி மூத்தத் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவருக்கு உள்கட்சியில் கடும் எதிர்ப்புகள் இருந்தன. இந்த நிலையில் எம்.பி., பதவிக் காலம் முடிந்த பின்னர், தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகினார்.

தொடர்ந்து வெளிநாட்டிற்கு படிக்கச் செல்வதாக கூறினார். சினிமாவிலும் நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமாரும், நடிகை ரம்யாவும் ட்விட்டரில் மோதிக்கொண்டுள்ளனர். இதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது பாஜக எம்பியை எதிர்த்து நடிகை ரம்யா காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த சிவராமேகவுடாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

நடிகை குத்து ரம்யா, டி.கே. சிவக்குமார் ட்விட்டரில் மோதல்!

எது எப்படியோ காங்கிரஸின் உள்கட்சி பிரச்சினை சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் உலகிற்கு தெரிந்துள்ளது, அம்மாநில காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், “காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூ.8 கோடி வாங்கிவிட்டு கட்சியில் இருந்து விலகினேன் என்று செய்திகள் வெளியானது. அதில் உண்மையில்லை. நான் காங்கிரஸ் கட்சியை ஏமாற்றவில்லை. நான் காங்கிரஸின் உண்மை விசுவாசி. என் சொந்தக் காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினேன்” எனவும் நடிகை குத்து ரம்யா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் டி.கே. சிவக்குமார்?

ABOUT THE AUTHOR

...view details