தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"வேற்றுமை களைந்து ஆட்சியைக் கைப்பற்றுவோம்.." தெலங்கானா தலைவர்களிடம் ராகுல் வலியுறுத்தல்!

தெலங்கானாவில் காங்கிரஸ் தலைவர்கள் வேற்றுமை மற்றும் கருத்துவேறுபாடுகளை களைந்து, ஒற்றுமையாக போராடி வரும் சட்டமன்ற தேர்தலில் பிஆர்எஸ் கட்சியிக்கு எதிராக ஓரணியில் களமிறங்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

Congress
Congress

By

Published : Jun 27, 2023, 6:46 PM IST

டெல்லி : தெலங்கானாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில தலைவர்களுடன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மாநில தலைவர்கள் அனைவரும் வேற்றுமை மற்றும் கருத்து வேறுபாடுகளை களைந்து, வரும் தேர்தலில் ஒற்றுமையாக போராடி மாநில அரசுக்கு எதிராக களமிறங்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து பேசிய தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்ராம் தாக்ரே, கூட்டத்தில் அனைத்து மாநில தலைவர்களின் கருத்துகளையும் ராகுல் காந்தி பொறுமையாக கேட்டதாக தெரிவித்தார். மேலும் அனைத்து தலைவர்களும் தங்களுக்குள் உள்ள வேற்றுமை மற்றும் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக போராடி மாநில அரசுக்கு எதிராக களமிறங்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

மாநில தலைவர்களிடையே சிறிய கருத்துவேறுபாடுகள் இருக்கலாம் என்றும் தெலங்கானாவில் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்த அனைவரின் ஒத்துழைப்பையும் ராகுல் காந்தி விரும்புவதாக அவர் கூறினார். தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றுவது குறித்து தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி தலைமையில் தலைநகர் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உள்கட்சி பூசல் காரணமாக தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து மாணிக்கம் தாக்கூர் நீக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் மாணிக்ராம் தாக்ரேவை மாநில பொறுப்பாளராக ராகுல் காந்தி நியமித்தார். மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது முதலே கட்சிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பாட்டி விக்ரமார்க் ஆகியோரை தனித்தனியாக மாநிலம் முழுவதும் பாதயாத்திரை உள்ளிட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டு கட்சியின் இயங்குதன்மை மட்டும் பலத்தை நிருப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

பிஆர்எஸ் கட்சியில் இருந்து அதிருப்தி காரணமாக மூத்த தலைவர்கள் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 80 இடங்களை கைப்பற்ற மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

பிஆர்எஸ் கட்சியில் இருந்து ஏறத்தாழ 35 மூத்த தலைவர்கள் காங்கிரசில் இணைந்த நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ராகுல் காந்தி ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தெலங்கானாவில் கள நிலவரம் மாறிவிட்டது என்றும் கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பிஆர்எஸ் நிறைவேற்றவில்லை என்றும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்ராம் தாக்ரே தெரிவித்து உள்ளார்.

மேலும், மாநில அரசுக்கு எதிராக அனைவரும் களமிறங்க வேண்டும் என்றும் அந்த கட்சியின் கையாலாகத்தனம் மற்றும் தோல்வியை வாக்காளர்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க :அடுத்த டார்கெட் தெலங்கானா... கட்டம் கட்டி வீழ்த்த துடிக்கும் காங்கிரஸ்... வீழ்வாரா கே.சி.ஆர்!

ABOUT THE AUTHOR

...view details