பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா, இன்று பெங்களூருவில் உள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை - எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா
15:00 January 28
14:06 January 28
இவர், எடியூரப்பாவின் இரண்டாவது மகள் பத்மாவதியின் மகள் ஆவார், மருத்துவரான இவருக்கும் மருத்துவர் நீரஜ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
இந்நிலையில் திருமணம் நடந்த ஓராண்டுக்குள் செளந்தர்யா தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
செளந்தர்யாவின் உடல் பெங்களூருவில் உள்ள போரிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பி.எஸ். எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.