தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் தலைவர் தேர்தல் - புதுவையில் பரபரப்பான வாககுப்பதிவு - காங்கிரஸ் கமிட்டி

புதுச்சேரியில் நடைபெற்று வரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸார் வாக்களித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

By

Published : Oct 17, 2022, 4:41 PM IST

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று(அக்.17) நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில், புதுச்சேரி மாநில தேர்தல் அதிகாரி ஹிபி ஈடன் எம்பி மேற்பார்வையில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் வாக்களித்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. இத்தேர்தலில் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த 29 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதையும் படிங்க:அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் - தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details