தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நாராயணசாமி - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

புதுச்சேரி: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

By

Published : Mar 3, 2021, 8:23 PM IST

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி 2021 ஜனவரி 16ஆம் தேதி முதல் போடப்பட்டுவருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நேற்று முன்தினம் (மார்ச் 1) 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இதுவரை புதுச்சேரியில் 10 ஆயிரத்து 701 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இந்நிலையில் இன்று (மார்ச் 3) புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details