புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று (ஆக.7) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், டெல்லியில் நடந்த 'நிதி ஆயோக் கூட்டம்' பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பல மாநில முதலமைச்சர்கள் தங்கள் மாநில பிரச்னைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய பிரதமர் மோடி, கூட்டாட்சி தத்துவம் பற்றி பேசினார்.
சர்வதிகார ஆட்யில் கூட்டாட்சி தத்துவம்?கடந்த8 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டாட்சி தத்துவம் பிரதமருக்கு வந்துள்ளது. நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டு கூட்டாட்சி தத்துவம் பற்றி பேசுவது, 'சாத்தான் வேதம் ஓதுவதுபோல்' உள்ளது. மாநிலங்களில் இரட்டை ஆட்சி முறை இல்லாத வகையில் பிரதமர் செயல்படுவார் என நம்புகிறேன்.
5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மீதமுள்ள ரூ.3 லட்சம் கோடி ஏன் அரசுக்கு வருவாய் வரவில்லை? இதற்கு பிரதமர் என்ன சொல்ல போகிறார்? பிரதமர் தோராயமக ரூ.3 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர் இதில் சிபிஐ விசாரணை நடத்த பிரதமர் தயாரா? 5 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக சிபிஐ விசாரணையை தொடங்க வேண்டும் என்றார்.
பட்ஜெட்டில் கணக்கு சமர்ப்பித்தது எப்படி? 2022-23 இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காத நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி 2022-23 வரவு செலவு கணக்கை எப்படி சமர்ப்பிப்பார் என்று கேள்வி எழுப்பினார். புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், கடந்த எங்களது ஆட்சியில் எப்படி ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்ததோ; அதேதான் தற்போதும் நடக்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.