தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் யஷ்வந்த் சின்ஹா!

பாஜகவிலிருந்து வெளியேறி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.

Yashwant Sinha joins TMC Yashwant Sinha West Bengal Assembly elections யஷ்வந்த் சின்ஹா பாஜக மேற்கு வங்கம் சட்டப்பேரவை தேர்தல்
Yashwant Sinha joins TMC Yashwant Sinha West Bengal Assembly elections யஷ்வந்த் சின்ஹா பாஜக மேற்கு வங்கம் சட்டப்பேரவை தேர்தல்

By

Published : Mar 13, 2021, 5:38 PM IST

கொல்கத்தா: பாஜக முன்னாள் தலைவர் யஷ்வந்த் சின்ஹா, திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். அப்போது நாட்டின் நீதித்துறை உள்பட நாட்டின் முக்கிய நிறுவனங்கள் பலவீனமாக உள்ளன என்று குற்றஞ்சாட்டினார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான யஷ்வந்த் சின்ஹா கொல்கத்தாவிலுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) தலைமையகத்தில் மூத்தத் தலைவர் சுதீப் பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

இதையடுத்து சின்ஹா கூறுகையில், “இன்று நாடு முன்னெப்போதும் இல்லாத எதிர்கொள்ள முடியாத நிலையில் உள்ளன. ஜனநாயகத்தின் பலம் என்பது நாட்டில் உள்ள நிறுவனங்களிடம் உள்ளது. ஆனால் நாட்டின் முக்கிய நிறுவனங்கள் சட்டம் உள்பட பலவீனமாக உள்ளன. வாஜ்பாய் காலத்தில் ஒருமித்த கருத்துக்கு மரியாதை கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அது சாத்தியமில்லை. கருத்துகளை நசுக்கி வெற்றி காணும் முயற்சி கையாளப்படுகிறது. பாஜக கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலிதளம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறியுள்ளன. தற்போது பாஜகவுடன் யார் நிற்கிறார்கள்?” எனக் கேள்வியெழுப்பினார்.

யஷ்வந்த் சின்ஹா பேட்டி

பாஜகவின் மூத்தத் தலைவரான யஷ்வந்த் சின்ஹா 2018இல் கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில் தற்போது அவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார். மேற்கு வங்கத்தின் 17ஆவது சட்டப்பேரவைக்கு தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மாநிலத்தின் 16ஆவது சட்டப்பேரவை மே 30ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

இதையும் படிங்க: ஒவ்வொரு மூலை முடுக்கெங்கிலும் தாமரை மலரும்- அனுராக் தாகூர்

ABOUT THE AUTHOR

...view details