தொலைக்காட்சி சேனல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை கணக்கிடும் டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்ததாக, ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனல் உள்ளிட்ட மூன்று சேனல்கள் மீது புகார் எழுந்தது.
டிஆர்பி முறைகேடு ஊடகத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டிஆர்பியை அளவிடும் ஹன்சா ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலரான நிதின் தியோகர், டிஆர்பியில் முறைகேடு நடைபெறுவதாக மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மும்பை காவல் துறையினர், பார்க் (BARC) அமைப்பின் முன்னாள் சிஇஓ பார்த்தோ தாஸ் குப்தா கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பார்த்தோ தாஸ் குப்தா பிணை வேண்டி தாக்கல் செய்த மனுவை மும்பை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் கடந்த 4ஆம் தேதி தள்ளுபடி செய்தது.