தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திர மாஜி முதல்வர் கிரண் குமார் ரெட்டி விலகல்.. காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி! - ஆந்திரா காங்கிரஸ்

ஆந்திரா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கிரண் குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Mar 12, 2023, 9:48 PM IST

Updated : Mar 12, 2023, 10:13 PM IST

ஹைதராபாத்:இந்திய தேசிய காங்கிரஸ்(INC) கட்சியைப் பொறுத்தவரையில் தென் மாநிலங்களில் குறிப்பிடத்தக்கத் தலைவர்களில் ஆந்திராவைச் சேர்ந்த கிரண் குமார் ரெட்டியும் ஒருவர். இவர் கடந்த 2010 முதல் 2014 வரை முதலமைச்சராக இருந்த இவர், ஆந்திரா, தெலங்கானா எனப் பிரிவதற்கு முன்பு முதலமைச்சராக இருந்ததால் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குடன் இருந்து வந்தார்.

ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குக் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்காததால் கட்சி மேலிடம் இவர் மீது அதிருப்தியிலிருந்ததாக சொல்லப்பட்டது. ஆனாலும், ராகுல் காந்தியைச் சந்திப்பது, சோனியா காந்தியுடன் ஆலோசனை என டெல்லி மேலிடத்துடன் கிரண் குமார் ரெட்டி(kiran kumar reddy) நேரடி தொடர்பில் இருந்து வந்தார்.

ஆந்திராவில் பாஜகவை வலுப்படுத்தவும், காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தவும் ஒரு முக்கிய தலைவரை பாஜக உற்றுநோக்கிக் காத்திருந்தது. அப்போது பாஜகவின் பார்வை கிரண் குமார் ரெட்டியின் பக்கம் திரும்பியதாகவும், பாஜக மேலிடம் அவருடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.

இதையும் படிங்க:தெலங்கானா முதல்வர் கேசிஆர் மகள் கவிதா அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்!

இந்தநிலையில் தான், கிரண் குமார் ரெட்டி தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளார். இதனால் அவர் பாஜகவில் அவர் இணைவது உறுதி என பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆந்திராவின் ராயலசீமா எனப்படும் பிரதான பகுதியில் பெரும் செல்வாக்கு கொண்டவர் கிரண் குமார் ரெட்டி. சித்தூர் மாவட்டத்தில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

ஏற்கனவே 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து விலகிய கிரண்குமார், 2018-ஆம் ஆண்டு டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்து தன்னை மறுபடியும் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். இந்தநிலையில் தற்போது மீண்டும் தனது விலகல் கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ளதால், மூத்த தலைவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இதுபோன்ற செயல்கள் ஆந்திர மாநில காங்கிரஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரண் குமார் ரெட்டியை வைத்து ஆந்திராவில் கால் ஊன்ற பாஜக நினைக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுவது போல் கிரண் குமார் பாஜகவில் இணையும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் பலரை அவர் கொண்டு வந்து பாஜகவில் இணைப்பார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Same Sex Marriage: ஒரே பாலின திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

Last Updated : Mar 12, 2023, 10:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details