ஹைதராபாத் : நாடு 1947இல் சுதந்திரம் பெற்றிருக்கலாம். ஆனால் அதற்கான விதைகள் 1857ஆம் ஆண்டுக்கு முன்பே விதைக்கப்பட்டுவிட்டன. அதில் ஒரு விருட்சம்தான் ராம்கர் ராணி அவந்திபாய். ஆங்கிலேயருக்கு எதிராக வெகுண்டெழுந்து அடிமை கட்டை விடுவிக்க போராடிய மகாராணி.
உலகில் பாலின சமத்துவத்துக்காக இன்றளவும் பெண்கள் போராடும் நிலையில், பலருக்கும் உத்வேகம் அளிக்கிறார் ராணி அவந்திபாய். மத்தியப் பிரதேசத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் உள்ள மந்தேஹாடி கிராமத்தில் நிலக்கிழார் ராவ் ஜூகார் சிங் மகளாக 1831ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி அவந்திபாய் பிறந்தார்.
ராணி அவந்திபாய்
சிறு வயதிலேயே வாழ்வீச்சில் கைதேர்ந்தவளாக காணப்பட்ட அவந்திபாய்க்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் ஆன்டோ பாய். அவந்திபாய் வாள்வீச்சு மட்டுமின்றி ராணுவ போர் முறைகள், ராஜ தந்திரம் மற்றும் அரசு நிர்வாகத்தில் சிறந்துவிளங்கினார். இவரை ராம்கர் அரச குமாரன் 1848இல் மணந்தார். அதன்பின்னர் ஆன்டோ பாய், அவந்திபாய் என்று அழைக்கப்பட்டார்.
இது குறித்து வரலாற்று ஆர்வலரும் எழுத்தாளர் நரேஷ் கூறுகையில், “ ராணி அவரது வீட்டில் ஆன்டோ பாய் என்று அழைக்கப்பட்டார். அவளது மாமனார் வீட்டில் அவந்தி பாய் என்று அழைக்கப்பட்டாள். அவந்திபாய் என்ற பெயரில் மட்டுமே ராம்கர் வரலாறு பதிவு செய்துள்ளது. ராணியின் மாமனார் லட்சுமண் சிங். இவர் விக்ரமாதித்ய சிங் ராஜாவின் மகன்” என்றார்.
வாரிசு இழப்பு கொள்கை
1851 ஆம் ஆண்டில், ராம்கர் மாநிலத்தின் ராஜாவும் அவந்திபாய் லோதியின் மாமனாருமான லட்சுமண் சிங் இறந்தார். அதன்பிறகு, இளவரசர் விக்ரமாதித்ய சிங் ராம்கர் மாநிலத்தின் அரசராக முடிசூட்டப்பட்டார். சில நாள்களில் விக்ரமாதித்தனும் உடல் நிலை குன்றி போக, அவரது இளவயது மகன்கள் அமன் மற்றும் ஷேர் சிங் ஆகியோருக்கும் முடிசூட முடியாத நிலை ஏற்பட்டது.
அப்போது ஆட்சி பொறுப்பை ஏற்றுகொண்டார் ராணி அவந்திபாய். ஆங்கிலேயர்கள் அவந்திபாயை மகாராணியாக ஏற்க மறுத்து அந்த சமாஸ்தானத்தை கபளீகரம் செய்ய துணிந்தனர். அதற்காக வாரிசு இழப்பு கொள்கையை பிரகடனப்படுத்தினர்.
ராம்கரை கைப்பற்ற சதி