தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேனீக்கள் தாக்கியதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2 குதிரைகள் உயிரிழப்பு - Kunigal Stud Farm

கர்நாடகாவில் தேனீக்கள் தாக்கியதில் அயர்லாந்து மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2 குதிரைகள் உயிரிழந்தன.

Etv Bharatகர்நாடக குதிரைப் பண்ணையில் தேனீ தாக்கியதால்  2 குதிரைகள் உயிரிழப்பு
Etv Bharatகர்நாடக குதிரைப் பண்ணையில் தேனீ தாக்கியதால் 2 குதிரைகள் உயிரிழப்பு

By

Published : Jan 7, 2023, 12:25 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள குனிகல் ஸ்டட் பண்ணையில் தேனீக்கள் தாக்கியதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அயர்லாந்து மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 2 ஆண் குதிரைகள் உயிரிழந்தன. இதில் அயர்லாந்தைச் சேர்ந்த 10 வயது குதிரை சானஸ் என்றழைக்கப்பட்டது. அதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த 15 வயது குதிரை ஏர் சப்போர்ட் என்றழைக்கப்பட்டது.

இந்த இரண்டு குதிரைகளையும் மேய்ச்சலின் போது ஆயிரக்கணக்கான தேனீக்கள் தாக்கியுள்ளன. இதனால் குதிரைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பண்ணை ஊழியர்கள் உடனடியாக கால்நடை மருத்துவர்களை அழைத்துவந்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் குதிரைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்த குதிரைகள் தலா 1 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டன.

இதையும் படிங்க:சிறுத்தை தாக்கி தந்தை, மகன் படுகாயம் - அடித்துக் கொன்ற கிராம மக்கள்

ABOUT THE AUTHOR

...view details