‘வளர்ச்சிக்கான நிதி மற்றும் வளர விரும்பும் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்ஜெட் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த இணையவழிக் கருத்தரங்கை மத்திய நிதியமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது: "நூற்றாண்டுக்கு ஒருமுறை பாதிக்கும் பெருந்தொற்றுக்கு பின்னர் இந்திய பொருளாதாரம் மீண்டும் வேகமடைந்துள்ளது. இது நமது பொருளாதாரத்தின் வலுவான அடிப்படையைபிரதிபலிக்கிறது. இந்த பட்ஜெட்டில் உயர் வளர்ச்சி வேகத்தை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
அந்நிய முதலீட்டு வரவுகளை ஊக்குவித்தல் உள்கட்டமைப்பு முதலீட்டுக்கு வரி குறைத்தல், என்ஐஐஎஃப், கிப்ட்சிட்டி, புதிய டிஎஃப்ஐ-க்கள் போன்ற அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் நிதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த அரசு முனைந்துள்ளது. நிதித்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விரிவாக பயன்படுத்தும் அரசின் முயற்சி தற்போது அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது. 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் அல்லது 75 மாவட்டங்களில் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி அரசு உருவாக்கவுள்ளது.