தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அந்த மனசுதான் சார்' - டெலிவரி பாய்க்கு 'பைக்' வாங்கிக் கொடுத்த வாடிக்கையாளர்

உணவு டெலிவரி செய்வதற்காக 9 கி.மீ. சைக்கிளில் வந்த டெலிவரி பாய் குறித்து வாடிக்கையாளர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு நிதி திரட்டி பைக் வாங்கிக் கொடுத்தது பலரது பாராட்டையும் பெற்றுவருகிறது.

'அந்த மனசுதான் சார்...' டெலிவரி பாய்க்கு 'பைக்' வாங்கிக் கொடுத்த வாடிக்கையாளர்
'அந்த மனசுதான் சார்...' டெலிவரி பாய்க்கு 'பைக்' வாங்கிக் கொடுத்த வாடிக்கையாளர்

By

Published : Jun 19, 2021, 12:46 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் இளைஞர் அகில் முகமது. மேடக் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்துவரும் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 14 மாதங்களாக சொமொட்டோ நிறுவனத்தின் டெலிவரி பாய்-ஆக பணியாற்றிவருகிறார்.

மழையில் நனைந்தவாறே

ஒரு நாளைக்கு 10 ஆர்டர்கள் என எல்லா இடங்களுக்கும் சைக்கிளில் சென்று உணவை டெலிவரி செய்யும் அகில், இதற்காக நாள்தோறும் 100 கி.மீ. வரை பயணிக்கிறார். ஜூன் 14ஆம் தேதி இரவு 10 மணிக்கு கிங்ஸ் ஹவுஸ் பகுதியிலிருந்து ராபின் முகேஷ் என்பவர் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

அப்போது பலத்த மழை பெய்துள்ளது. இருப்பினும் ஆர்டர் செய்த 12 நிமிடங்களில் 9 கி.மீ. கடந்துசென்று உணவை டெலிவரி செய்ய அகில், முகேஷின் இருப்பிடத்திற்கு சென்றுள்ளார். மழையில் நனைந்தவாறே சைக்கிளில் சென்று உணவை ஒப்படைத்த அகிலின் செயலால் முகேஷ் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் நிதி திரட்டிய வாடிக்கையாளர்

அகிலின் குடும்பச் சூழ்நிலையை அறிந்த முகேஷ் அவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இது குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "அகிலுக்கு டிவிஎஸ் பைக் வாங்கித் தர 65 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கு யாரேனும் நிதி அளித்தால் நன்றாக இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 12 மணி நேரத்தில் 75 ஆயிரம் ரூபாய் வரை நிதி கிடைத்துள்ளது. குறிப்பாக அமெரிக்கப் பெண்மணி ஒருவர் 30 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை இந்தப் பணத்தை வைத்து முகேஷ் அவருக்கு இருசக்கர வாகனம், ரெயின் கோட், சானிடைசர், முகக்கவசம் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்துள்ளார். முகேஷின் இந்தச் செயல் பலரது பாராட்டையும் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க;'ஒரே மேடை.. இரு காதலிகளுடன் திருமணம்..' - சாமர்த்தியசாலியான 90’ஸ் கிட்ஸ்

ABOUT THE AUTHOR

...view details