வன்முறை வெறியாட்டத்திலிருந்து தப்பி, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இந்தியாவை நோக்கி ஓடத் தொடங்கிய சிறுவனின் பயணம், தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
தன்னுடைய 91ஆவது வயதில் கரோனா தொற்றுடன் போராடிவந்த அவர், நேற்றிரவு (ஜூன் 18) சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
பாகிஸ்தானில் பிறந்தவர்
1935 அக்டோபர் 8 அன்று பாகிஸ்தானில் பிறந்தவர் மில்கா சிங். தனது பதினைந்து வயதில், இந்தியப் பிரிவினை கலவரத்தில் தனது கண்முன்னே குடும்பத்தினர் இறப்பதைக் கண்டவர்.
மில்கா சிங்கின் முதல் ஓட்டம் அப்போது மில்காவிடம் அவரது தந்தை கூறிய வார்த்தை ''ஓடு மில்கா, இல்லை உன்னையும் கொன்றுவிடுவார்கள், ஓடு மில்கா'' என்பதுதான்.
ராணுவ தடகளம்
கிராஸ் கண்ட்ரி ஓட்டப்பந்தயத்தில், ஒரு டம்ளர் பாலுக்காக ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை மின்னல் வேகத்தில் கடந்து, ராணுவத் தடகளப் பிரிவில் இணைந்தார்.
அங்கிருந்து தொடங்கிய மில்கா சிங்கின் ஓட்டப்பயணம், அவரை 1956ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கச்செய்தது.
முதலில் தோல்வியைச் சந்தித்தாலும், விடா முயற்சியால் 1958ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டரில் வெற்றிபெற்று, இந்தியாவிற்கு முதன்முதலாக "தங்கப்பதக்கம்" பெற்றுக்கொடுத்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தங்கம்
சுதந்திரமடைந்த பிறகு தடகளப்போட்டியில் தங்கம் பெற்றுக்கொடுத்த முதல் தடகள விளையாட்டு வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார்.
அன்றைய இந்திய பிரதமர் நேருவுடன் மில்கா சிங் தொடர்ந்து தனது வேகத்தின்மூலம் பல்வேறு போட்டிகளில் இந்தியாவிற்காகப் பதக்கங்களை அள்ளி குவிக்கத் தொடங்கினார் மில்கா சிங். ஒலிம்பிக் போட்டிகளைத் தவிர மற்ற அனைத்து சர்வதேச தடகளப் போட்டிகளிலும் சாம்பியன், மில்காதான்.
மில்கா சிங் கையொப்பமிட்ட புகைப்படம் ஏனெனில் காமன்வெல்த் போட்டிகளில் ஒரு தங்கம், ஆசிய விளையாட்டுகளில் நான்கு தங்கம் என இந்தியாவிற்குத் தடகளப்போட்டிகளில் பெருமைசேர்த்தார்.
பத்ம ஸ்ரீ விருது
1959ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதும் பெற்றார் மில்கா சிங். 1960ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நூலிழையில் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
பறக்கும் சீக்கியர் பெயர் வந்த கதை
உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராகத் திகழத் தொடங்கிய மில்கா, 1960ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பாகிஸ்தான் ஸ்ப்ரிண்டர் அப்துல் கலிக்கை தோற்கடித்து டோக்கியோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
மில்கா சிங்கை சந்தித்த திரை நட்சத்திரங்கள் 1958ஆம் ஆண்டில் ஆசியாவில் அதிவேக மனிதராக இருந்துவந்தவர் கலிக். ஆனால், அவரை அசுர வேகத்தில் ஓடித் தோற்கடித்த காரணத்தினால், இந்திய ஸ்ப்ரிண்டர் மில்கா சிங்குக்கு பாகிஸ்தான் பிரதமர் ஜெனரல் அயூப்கான், 'பறக்கும் சீக்கியர்' எனப் பெயர் சூட்டினார். அன்று முதலே பறக்கும் சீக்கியராகத் திகழத் தொடங்கினார் மில்கா சிங்.
மேலும்:‘என் மகளை நினைத்து பெருமை கொள்கிறேன்’ - மில்கா சிங்!
சுயசரிதை புத்தகம்
இவரே தன் வாழ்க்கை வரலாற்றை “The Race of My Life” என்ற புத்தகமாக எழுதியுள்ளார். மேலும், 2013இல் இவரது வாழ்க்கை வரலாற்றைப் பாலிவுட்டில் "பாக் மில்கா பாக்" (ஓடு மில்கா ஓடு) என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது.
பிரதமர் மோடியுடன் மில்கா சிங் 164 கோடி ரூபாய் வசூல் சாதனைபுரிந்த இந்தத் திரைப்படத்துக்கான உரிமத்தொகையாக ஒரு ரூபாயை மட்டுமே மில்கா சிங் பெற்றிருந்தார். படத்தின் லாபத்தில் கிடைக்கும் 15 விழுக்காட்டைத் தொண்டு நிறுவனத்துக்குத் தரவும் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
மில்கா சிங் கனவு
ஆசிய, காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற மில்கா சிங்கின் கனவு, இறப்பதற்குள் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியா தங்கம் வெல்வதைப் பார்த்திட வேண்டும் என்பதுதான். ஆனால், இன்றுவரை அவரின் ஆசை நிறைவேறாமலே உள்ளது.
பல தடகள வீரர்களுக்கு ஆதர்ச நாயகன் மில்கா சிங்கை காலம் தன்னுடன் அழைத்துச் சென்றாலும், அவரது சாதனைகள் மூலமாகப் பல தடகள வீரர்களுக்கு ஆதர்ச நாயகனாக விளங்குவார்.
இதையும் படிங்க:சுதந்திர இந்தியாவின் முதல் தடகள வீரர் மில்கா சிங்