பாட்னா:பிகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் இன்று (டிசம்பர் 7) எரிபொருள் கசிவு காரணமாக கவுகாத்திக்கு செல்லவிருந்த ஃப்ளைபிக் விமானம் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து பாட்னா விமான நிலைய நிர்வாகம் தரப்பில், பாட்னாவில் இருந்து எப்எல்ஜி 219 என்ற ஃப்ளைபிக் விமானம் மாலை 6.15 மணியளவில் கவுகாத்திக்கு செல்ல புறப்பட தயாராக இருந்தது.
எரிபொருள் கசிவு காரணமாக ஃப்ளைபிக் விமானம் ரத்து... பயணிகள் அவதி... - பாட்னா ஃப்ளைபிக் விமானம் ரத்து
பிகார் மாநிலத்தின் பாட்னா விமான நிலையத்தில் எரிபொருள் கசிவு காரணமாக கவுகாத்திக்கு செல்ல இருந்த ஃப்ளைபிக் விமானம் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது
இந்த விமான பயணிகள் 66 பேரும் போர்டிங் பாஸ்களைப் பெற்ற பிறகு காத்திருப்பு அறையில் இருந்தனர். இந்த நேரத்தில் மாலை 5:45 மணியளவில் விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் விமானம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்த தகவல் தாமதமாக பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த விமானம் பாட்னா விமான நிலையத்திலேயே பழுது பார்கப்பட்டுவருகிறது. விரைவில் சரி செய்யப்படும். இரவுக்குள் மீண்டும் புறப்படும் என்று எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:"பிரதமரின் ஆசீர்வாதம் தேவை" - தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் கெஜ்ரிவால் பேச்சு