தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அசாமில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு; 5 லட்சம் பேர் பாதிப்பு - flood in Brahmaputra river

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் 16 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 5 லட்சம் பேர் பாதிப்பு
அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 5 லட்சம் பேர் பாதிப்பு

By

Published : Jun 23, 2023, 2:38 PM IST

கவுகாத்தி:அசாமில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்பொது மாநிலத்தின் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை, இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் நீர் நிலைகள் பெருகக்கூடும் ஆகவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நேற்று (ஜூன் 22) வரை வெள்ளத்தால் சுமார் 4.95 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA - Assam State Disaster Management Authority) தெரிவித்துள்ளது. இறப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில் தற்போது உடல்குரி மாவட்டம் தமுல்பூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேமாதிகாட் (ஜோர்ஹாட்) மற்றும் துப்ரி ஆகிய இடங்களில் பிரம்மபுத்திரா நதி அபாய அளவையும் தாண்டி பாய்வதாக மத்திய நீர் ஆணையத்தின் (CWC - Central Water Commission) அறிக்கை தெரிவித்துள்ளது.

புத்திமாரி (கம்ரூப்), பக்லகியா (நல்பாரி) மற்றும் மனாஸ் (பார்பேட்டா) போன்ற ஆறுகளும் அபாய அளவையும் தாண்டி பாய்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கவுகாத்தியில் மஞ்சள் வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பாதிப்பால் 16 மாவட்டங்கள் மற்றும் 4 துணைப் பிரிவுகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. இதில், பஜாலி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுவரையில் 7 மாவட்டங்களில் உள்ள 83 நிவாரண முகாம்களில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்து உள்ளனர். மேலும் 79 நிவாரண விநியோக மையங்களும் செயல்பட்டு வருகின்றன. துணை ராணுவப் படைகள், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF - National Disaster Response Force), மாநில பேரிடர் மீட்பு படை (SDRF - State Disaster Response Force), தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் (F&ES - Fire and Emergency Services), சிவில் நிர்வாகங்கள், (NGO - Non Governmental Organisation) தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்புக் குழு போன்ற குழுக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோனிட்பூர், போங்கைகாவ்ன், தர்ராங், துப்ரி, லக்கிம்பூர், மோரிகான், நல்பாரி, தெற்கு சல்மாரா மற்றும் உடல்குரி ஆகிய இடங்களில் மண் அரிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கையில் தெரிவித்து உள்ளது. கனமழையின் காரணமாக பொங்கைகான் மற்றும் டிமா ஹசாவோ போன்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பர்பேட்டா, சோனித்பூர், தர்ராங், நல்பாரி, பக்சா, சிராங், துப்ரி, கோக்ரஜார், லக்கிம்பூர், உடல்குரி, போங்கைகான், தேமாஜி மற்றும் திப்ருகார் ஆகிய இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரைகள், சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் போன்றவை சேதமடைந்து உள்ளதாகவும், பர்பேட்டா, தர்ராங், ஜோர்ஹாட், கம்ரூப் பெருநகரம் மற்றும் கோக்ரஜார் போன்ற நகர்ப்புறங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது அறிக்கையில் கூறி உள்ளது.

இதையும் படிங்க:வடக்கு காஷ்மீரில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details