தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம் - flights to be resumed

கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூரு பகுதிகளுக்கு விமான சேவைகள் மீண்டும் இயக்கப்படுகின்றன.

விமான சேவை
விமான சேவை

By

Published : Oct 7, 2021, 6:23 PM IST

புதுச்சேரி:புதுச்சேரியில்கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளன.

புதுச்சேரியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு விமான வேவைகள் தொடங்கப்பட்டாலும், ஹைதராபாத், பெங்களூருக்கு விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தன.

இந்தநிலையில் இந்த மாத இறுதியில் இருந்து நாள்தோறும் ஹைதராபாத், பெங்களூருவிற்கு விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன. அடுத்தகட்டமாக கொச்சின், கோழிக்கோடு பகுதிகளுக்கு விமான சேவை தொடங்கப்படுகிறது.

புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக தமிழ்நாடு பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சாலையோர மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ’விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடுக’ - இபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details