உக்ரைன் நாட்டின் சுமி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் 242 பேர் விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஆப்பரேஷன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக சுமி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 600க்கும் மேற்பட்டவர்களை இந்தியா கொண்டுவருவதற்காக மூன்று விமானங்கள் போலாந்து சென்றன.
அதன் முதல் விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது. இதில், 242 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். விமானத்தில் வந்த தீரஜ் குமார் என்ற மாணவர் பேசுகையில், "சுமியில் நாங்கள் எதிர்பாராத சவால்களைச் சந்தித்தோம். தற்போது அவற்றையெல்லாம் தாண்டி தாய்நாடு திரும்பி பெற்றோரை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் உயிருடன் நாடு திரும்பியது அதிசயம் போல உள்ளது" எனக் கூறினார்.