தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 8, 2022, 4:25 PM IST

Updated : Jan 8, 2022, 4:37 PM IST

ETV Bharat / bharat

உ.பி., பஞ்சாப் உள்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல், வாக்கு எண்ணிக்கை தேதிகளை இந்தியத் தேர்தல் தலைமை ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்தார்.

Election Commission of India, இந்திய தேர்தல் ஆணையம்
Election Commission of India

டெல்லி: உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தாண்டு மார்ச், மே மாதங்களில் சட்டப்பேரவை காலம் நிறைவடைகிறது. ஆதலால், இந்த மாநிலங்களுக்கு இந்தாண்டு மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் கரோனா, ஒமைக்ரான் தொற்றால் இந்தத் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. மேலும், இதுபோன்ற உத்தரப் பிரதேசம் போன்ற மிகப்பெரிய மாநிலத்தில் தேர்தல் நடத்துவது என்பது மிகவும் கடினமானது என்பதால் தேர்தல் ஆணையம் எப்படி இந்தத் தேர்தலை நடத்தப்போகிறது என்ற கேள்வியும் எழுந்தது.

மார்ச் 10இல் வாக்கு எண்ணிக்கை

இந்நிலையில், இந்தியத் தேர்தல் தலைமை ஆணையர் சுஷில் சந்திரா இன்று (ஜனவரி 8) செய்தியாளரைச் சந்தித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில் ஐந்து மாநிலங்களில் தொற்று காலங்களில் தேர்தல் நடத்துவதற்குரிய வழிமுறைகள், வாக்குச்சாவடிகளின் அமைப்பு உள்ளிட்டவை குறித்துப் பேசினார். மேலும், ஐந்து மாநிலங்களின் தேர்தல் வாக்குப்பதிவு நாள்கள், வாக்கு எண்ணும் நாள் ஆகியவற்றையும் அறிவித்தார்.

ஐந்து மாநிலங்களில் மொத்தம் 690 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஒரு வாக்குச்சாவடி 1,250 லிருந்து 1,500 பேர் மட்டும் வாக்களிக்க முடியும் என்றும் வீடு வீடாகப் பரப்புரைக்குச் செல்ல ஐந்து பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஐந்து மாநிங்களில் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. மேலும், அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதிகள்

உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளில் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.

  • முதற்கட்ட வாக்குப்பதிவு - பிப்ரவரி 10
  • இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - பிப்ரவரி 14
  • மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு - பிப்ரவரி 20
  • நான்காம் கட்ட வாக்குப்பதிவு - பிப்ரவரி 23
  • ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு - பிப்ரவரி 27
  • ஆறாம் கட்ட வாக்குப்பதிவு - மார்ச் 3
  • ஏழாம் கட்ட வாக்குப்பதிவு - மார்ச் 7

பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகள், கோவா மாநிலத்தில் 40 தொகுதிகள், உத்தரகாண்டில் 70 தொகுதிகள் ஆகியவற்றில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. மணிப்பூரில் மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கு பிப்ரவரி 27, மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு; பஞ்சாப் அரசை கலைக்க ஹரியானா வலியுறுத்தல்!

Last Updated : Jan 8, 2022, 4:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details