ஐதராபாத் :ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், இன்று (நவ. 30) தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
மத்திய பிரதேசம் : 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்திற்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவைப்படும் நிலையில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக மற்றும் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அதைத் தொடர்ந்து பகுஜான் சமாஜ் கூட்டணி, ஆசாத் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஜனதா தள் உள்ளிட்ட கட்சிகளும் இம்முறை தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முக்கிய போட்டி காங்கிரஸ் - பாஜக இடையே நிலவுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 116):
பாஜக | காங்கிரஸ் | மற்றவை | |
---|---|---|---|
CNN | 112 | 113 | 05 |
janki Baat | 100 - 123 | 102 - 125 | 05 |
Republic | 118 - 130 | 97 - 107 | 02 |
TV 9 | 106 - 116 | 113 - 121 | 06 |
ராஜஸ்தான் :200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி 119 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனூர் உயிரிழந்ததால், அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. எனவே, மீதம் உள்ள 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது.
ராஜஸ்தானை பொறுத்தவரை காங்கிரஸ் - பாஜக இடையே தான் போட்டியே. ஆட்சியை தக்கவைக்க அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் மீண்டும் ஆட்சியை பிடிக்க ராஜேந்திர சிங் ரத்தோர் தலைமையிலான பாஜகவும் முனைப்பு காட்டி வருகின்றன. இதைத் தொடர்ந்து பகுஜான் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் போட்டியில் உள்ளன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 101) :
பாஜக | காங்கிரஸ் | மற்றவை | |
---|---|---|---|
CNN | 111 | 74 | 14 |
janki Baat | 100 -122 | 62 - 85 | 14 - 15 |
TV9 | 90 - 100 | 100 - 110 | 05 - 15 |
NDTV | 100 - 122 | 62 - 85 | 14 - 15 |
ETG | 108 - 128 | 56 - 72 | 13 - 21 |
Axis my India | 80 - 100 | 86 - 106 | ---- |
தெலங்கானா :தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தெலங்கானா மாநிலத்தை பொறுத்தவரை மாநிலம் தொடங்கியது முதல் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியில் உள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகள் பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சிக் கட்டிலில் உள்ள நிலையில், நடப்பாண்டு தேர்தல் முடிவுகள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.