சண்டிகர் : பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், காங்கிரஸ் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையேயான பனிப்போர் நாடறிந்ததே.
இந்நிலையில் முதலமைச்சர் பதவியை கேப்டன் அமரீந்தர் சிங் துறந்தார். அதன்பின்னர் இருவர் இடையே ஒருவித அமைதி நிலவியது. மாநிலத்தின் முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து நவ்ஜோத் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், பஞ்சாப் எதிர்காலத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன், மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். ஒரு தொண்டராக கட்சியில் நீடிப்பேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து ட்விட்டரில் பதிலளித்துள்ள கேப்டன் அமரீந்தர் சிங், “அவர் ஒரு நிலையான மனிதர் கிடையாது என்று நான் ஏற்கனவே கூறினேன். அவரால் பஞ்சாப் போன்ற எல்லை மாநிலத்தை நிர்வகிப்பது சாத்தியமல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
இது ஒரு புறம் இருந்தாலும் நவ்ஜோத் சிங்கின் ராஜினாமாவுக்கான 5 காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
1) முதலமைச்சர் பதவி ஏமாற்றம்
கேப்டன் அமரீந்தர் சிங்கின் பதவி விலகலுக்கு பிறகு தனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று நவ்ஜோத் சிங் நினைத்திருந்தார். ஆனால் சித்து முதலமைச்சராக வரமுடியாதபடி அமரீந்தர் சிங் காய்நகர்த்தினார். சித்து நாட்டுக்கும் பஞ்சாப்பிற்கும் அச்சுறுத்தல் என்று விமர்சித்தார். காங்கிரஸின் உயர்மட்ட தலைவர்களின் ஆதரவையும் சித்து பெறமுடியவில்லை.
2) சித்து கருத்து நிராகரிப்பு