ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டதில் உமேத் சிங் ராஜ்புத், சந்தோஷ் சர்மா, முகேஷ் அல்லது பப்பு, சுக்ரத், ரத்தன்லால் ஜோகி ஆகிய ஐந்து பேரையும் கரோனா பரிசோதைக்கு உட்படுத்தி சிறையில் அடைப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கரோனா பரிசோதனை - மருத்துவமனையிலிருந்து ஐந்து கைதிகள் தப்பியோட்டம்! - கைதிகள் தப்பி ஓட்டம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஐந்து கைதிகள் தப்பியோடினர்.
கரோனா பரிசோதனை மருத்துவமனையிலிருந்து ஐந்து கைதிகள் தப்பியோட்டம்!
அங்கு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்கள் ஐந்து பேரும் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனை அறிந்த காவல் துறையினர், உடனடியாக உயர் அலுவளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தப்பியோடியவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.