ஆந்திரா:ஆந்திராவின் சத்யசாய் மாவட்டத்தில் தாடிமரி மண்டல் சில்லகொண்டய்யபள்ளி என்ற இடத்தில் ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிந்தது. அப்போது ஆட்டோ மீது மின் கம்பி விழுந்ததாக தெரிகிறது. இதில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விவசாய பணிகளுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் அனைவரும் கூடம்பள்ளியில் இருந்து சில்லகொண்டய்யப்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.
சம்பவத்தின் போது ஆட்டோவில் டிரைவருடன் 13 பேர் இருந்துள்ளனர். அதில் டிரைவர் பொத்துலய்யா மற்றும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். மின் அழுத்த கம்பி விழுந்ததும் உடனே ஓட்டுனர் ஆட்டோவை ஓரமாக நிறுத்தியுள்ளார். இருப்பினும் ஆட்டோ தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. ஆட்டோ ரெக்சின் கவரால் மூடப்பட்டிருந்ததால் உடனடியாக தீ பரவியது. இந்த சம்பவத்தில் சிலர் மட்டுமே உயிர் தப்பினர்.