தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறுதிச் சடங்குக்காக ஆற்றில் இறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி - இறுதி சடங்குக்காக ஆற்றில் இறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

பீகாரில் உயிரிழந்தவருக்கு இறுதிச் சடங்கு மேற்கொண்ட போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 13, 2022, 10:25 AM IST

பாட்னா:பீகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள கந்தப்பாகாட் கிராமத்தைச் சேர்ந்த அஷ்ரஃபி சாஹ் என்பவரின் தாயார் நேற்று முன்தினம் (ஆக. 11) உயிரிழந்தார். . தாயாருக்கு இறுதிச்சடங்கு மேற்கொள்ள தனது குடும்பத்தினர் பலரை அஷ்ரஃபி சாஹ், ஜார்ஹி ஆற்றங்கரைக்கு நேற்று (ஆக. 12) அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, இறுதி சடங்கின் ஒரு பகுதியாக, ஆற்றில் இறங்கி குளிக்க சென்ற இருவர் ஆழமான பகுதியில் இருந்த சுழலில் சிக்கித் தத்தளித்துள்ளனர். அவர்களை காப்பாற்ற மேலும் மூன்று பேர் ஆற்றில் குதித்துள்ளனர். அவர்களும் சுழலில் சிக்கி ஆற்றில் மூழ்கியுள்ளனர். இந்த ஐந்து பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் .

தொடர்ந்து, ஆற்றில் நீச்சல் தெரிந்த உள்ளூர்வாசிகளின் உதவியோடு உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. அவர்களின் உடலை உடற்கூராய்வுக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அஜய் சாஹ் (24), விஜய் (22), விஷால் (16), ரிதேஷ் (34), விகாஸ் குமார் (20) ஆகியோர் இச்சம்பவத்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த ஐந்து பேரும் அஷ்ரஃபி சாஹ்-வின் பேரன்கள் என எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:பீகாரில் போலி மதுபானத்தால் 7 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details