தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடித்துக் கொலை - கொலை செய்த மர்மநபர்கள் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த மர்மநபர்கள் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

கொலை
கொலை

By

Published : Apr 23, 2022, 8:56 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ஷிவ்ராஜ்பூர் கிராமத்தில் வீடு ஒன்று தீப்பற்றி எரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ஆய்வு செய்ததில், தீப்பற்றிய வீட்டிற்குள் சடலங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், குடும்பத்தலைவர் ராஜ்குமார்(55), அவரது பேத்தி மீனாட்சி(2) உள்ளிட்ட வீட்டிலிருந்த 5 பேரை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்துவிட்டு, வீட்டிற்கு தீ வைத்ததாக தெரிய வந்துள்ளது.

ராஜ்குமாரின் மகன் சுனில், மற்றொரு பேத்தி சாக்‌ஷி இருவரும் சம்பவம் நடந்தபோது வீட்டில் இல்லாதாதல் உயிர்பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் என்ன? கொல்லப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜீப் மீது டிரக் மோதி கோர விபத்து: 7 பேர் உயிரிழப்பு, 11 பேர் காயம்

ABOUT THE AUTHOR

...view details