தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.-யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மரணம்! கொலையா? தற்கொலையா? - உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜில் உள்ள கக்கல்பூர் கிராம

உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயக்ராஜ் பகுதியில் உள்ள ராகுல் திவாரி மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் உட்பட 5 பேரின் சடலங்கள் அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மரணம்! கொலையா? தற்கொலையா?
உத்தரப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மரணம்! கொலையா? தற்கொலையா?

By

Published : Apr 16, 2022, 7:46 PM IST

பிரயக்ராஜ் (உத்தரப்பிரதேசம்):உத்தரப்பிரதேச மாநிலம், பிரயக்ராஜில் உள்ள கக்கல்பூர் கிராமத்தில் நேற்று(ஏப்ரல் 15) இரவு ராகுல் திவாரி என்பவரது மனைவி மற்றும் மூன்று மகள்களின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பின்னர் ராகுல் திவாரி அவரது அறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

ராகுலே அவரது மனைவி மற்றும் மகளை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

கக்கல்பூர் காவல் துறையினர் ராகுல் திவாரி மற்றும் அவரது மனைவி பிரீத்தி, மகள்கள் மகி,பிகு, போகு ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொலைக்கான காரணம் என்ன எனவும் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:Video: ஷாப்பிங் மாலில் தீ விபத்து: துணிக்கடை எரிந்து நாசம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details