உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியிலுள்ள இனயாத் நகரில் வசித்து வந்த ரமேஷுக்கும், அவரது மருமகன் பவனுக்கும் இடையே சொத்து தகராறு நெடுங்காலமாக இருந்துள்ளது. ரமேஷ் வீட்டில் தான் பவனும் வசித்துவந்தார்.
இந்தநிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி சொத்து தொடர்பாக வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த பவன், நேற்றிரவு (மே.22) தனது மாமா ரமேஷ், அவரது மனைவி ஜோதி மற்றும் அவரது குழந்தைகள் மூவரையும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.